Asianet News TamilAsianet News Tamil

என்.ஆர்.சி விவகாரம்..! ஆளும் அதிமுகவிற்கு திடீர் நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்..!

பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் என்ஆர்சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே  2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பிஆர் தயாரிக்கப்பட வேண்டும்!

Ramadoss demands for resolution against NRC in tamilnadu assembly
Author
Vellore, First Published Feb 27, 2020, 1:31 PM IST

பிகார் மாநிலத்தை போல தமிழக சட்டப்பேரவையிலும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், 'பிகார் மாநில சட்டப்பேரவையில் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையும் இது தான். 31.12.2019 அன்று  நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Ramadoss demands for resolution against NRC in tamilnadu assembly

பிகார் மாநிலத்தை பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் என்ஆர்சி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பிகார் மாநிலத்தைப் போலவே  2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதே வடிவத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பிஆர் தயாரிக்கப்பட வேண்டும்! அஸ்ஸாம் மாநிலத்தை தவிர இந்தியாவின் எந்த மாநிலத்திலும் என்ஆர்சி தயாரிக்கப்படாது; அது குறித்த விவாதம் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதும், அதை உள்துறை அமைச்சர் அமித்ஷா வழி மொழிந்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

 

தமிழக சட்டப்பேரவையில் குடிமக்கள் பதிவேடு என்ஆர்சி-க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சரியான நிலைப்பாடு. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பிஆர் தொடர்பாக மக்களிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயத்தையும் அரசு போக்க வேண்டும்!' என தனது ட்விட்டர் பதிவில் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios