Asianet News TamilAsianet News Tamil

ஒன்றரை ஆண்டுகளாயிடுச்சி... யார் சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? கவலைப்படும் பாமக ராமதாஸ்..!

விடுதலை கோரும் கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுனருக்கு பேரறிவாளன் கடிதம். உச்சநீதிமன்றம் நினைவூட்டுகிறது, பேரறிவாளன் நினைவூட்டுகிறார்,  பா.ம.க. நினைவூட்டுகிறது. 

Ramadas request for governor
Author
Tamil Nadu, First Published Jan 28, 2020, 11:54 AM IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்  விடுதலை விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகளாக ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

 Ramadas request for governor

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’விடுதலை கோரும் கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுனருக்கு பேரறிவாளன் கடிதம். உச்சநீதிமன்றம் நினைவூட்டுகிறது, பேரறிவாளன் நினைவூட்டுகிறார்,  பா.ம.க. நினைவூட்டுகிறது. ஆனாலும் ஒன்றரை ஆண்டுகளாக ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை. வாழ்க ஜனநாயகம்.

 

தமிழக மீனவர்கள் 11 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் மூன்றாவது கைதுப் படலம் இது. சிங்கள அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க வகை செய்யப்பட வேண்டும்’’என்று அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios