ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்ரமணியசாமி கடும் தாக்கு..!

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணம்,கருப்பு பணத்தை வெளிநாட்டில் வைத்திருக்கிறார்.இதே போல் ,ப்ரவுன்சுகர் பிசினஸ் எல்லாம் மற்றவர்களைப் போல் ரஜினியும் செய்கிறார் என்று பாஜக பிரமுகர் சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியிருக்கிறரர்.


தமிழகத்தில் ரஜினிகாந்த் இமேஜ்சை தூக்கி பிடிக்க நினைக்கும் பாஜகவுக்கு சு.சாமி சொல்லியிருக்கும் விசயங்களை இடியாக இருக்கிறது. பெரியாரை விமர்சித்த ரஜினிகாந்த்க்கு தமிழகத்தில் பலத்த எதிர்குரல் தாக்குதல்கள் நடந்து வந்து கொண்டிருக்கிற நேரத்தில் சு.சாமி பேசியிருக்கும் விசயங்கள் திராவிட கட்சிகளுக்கும், திக கட்சியினருக்கும் திருநெல்வேலி அல்வா போல் கிடைத்திருக்கிறது.சு.சாமி அந்த வீடியோவில் பேசிய பேச்சுக்கள்...
“சினிமாவில் சம்பாதித்த பணம் கருப்பு பணம் ப்ரவுண்சுகர் பணம்  என வெளிநாட்டில் பணம் பதுக்கும் பழக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்ம் இருக்கிறார். ப்ரவுண்சுகர் பிசினஸ்சை வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் செய்கிறார்கள் அதில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். ஊழலை ஒழிப்பேன்னு இதுவரைக்கும் ;ரஜினி சொல்லியிருக்கிறாரா? இல்லையே.. யாராவது எழுதிக்கொடுக்கிற டயலாக் பேசிக்கிட்டு ரஜினி அரசியலுக்கு வரமுடியுமா?  எனவு கேள்வி எழுப்புகிறார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிபதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அப்ளிகேசன் கூட கொடுக்கவில்லை. இவர் அரசியலுக்கு வரட்டும் வராமல் கூட போகட்டும் அது பிரச்சனை அல்ல. இவரால் அரசியலில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அவருடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்று சொல்லியிருப்பதற்குள் நான் வரவில்லை. பிஜேபிக்குள் இன்னும் ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன். அதையும் மீறினால் நான் பாஜகவில் இருந்து விலகி வேறுமாதிரி செயல்படுவேன்.என கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

T Balamurukan