Asianet News TamilAsianet News Tamil

பெரியார் காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே... 13 ஆண்டுகளுக்கு முன் ஏங்கிய ரஜினி..!

பெரியார் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 2007ல் எழுதிய கடிதம் இப்போது சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 
 

Rajini's longing for Periyar's absence
Author
Tamil Nadu, First Published Jan 23, 2020, 1:42 PM IST

பெரியார் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு 2007ல் எழுதிய கடிதம் இப்போது சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

பெரியார் ராமர், சீதை உருவங்களை நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்ததாக ரஜினி பேசியது சர்ச்சையானது. அதற்காக ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெரியாரிஸ்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இல்லாததை தான் பேசவில்லை மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார். Rajini's longing for Periyar's absence

இந்நிலையில் 2007ம் ஆம் ஆண்டு பெரியார் படம் வெளியானபோது ரஜினி, வீரமணிக்கு எழுதிய கடிதத்தை கி.வீரமணி தரப்பினர் இப்போது மீண்டும் வெளியிட்டுள்ளனர். அதில், ’’பெரியார் படம் பார்த்து பிரமிப்படைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்தப்படத்தின் மூலம் அவருடய வாழ்க்கை வரலாற்றி அறிந்த பிறகு பெரியார் மீது  எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. Rajini's longing for Periyar's absence

சமூக நலனுக்காகப்போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப்பழகிய கருணாநிதி ஆசிரியர் வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகட் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’என ரஜினிகாந்த்  பெரியார் படம் பார்த்து விட்டு 2007ல் எழுதிய கடிதத்தை திமுக- திகவினர் பரப்பி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios