பல காலமாக அரசியலுக்கு இதோ வருகிறேன்... அதோ வருகிறேன் எனக் கூறி வந்த ரஜினிகாந்த்  ஒரு வழியாக தீவிர அரசியலுக்கு வர இருந்த நிலையில் கொரோனா வந்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. 

திடீரென மாவட்ட செயலர்கள் கூட்டம் போட்டு, பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து மக்கள் எழுச்சி என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்ப  ரஜினி முடிவு செய்து இருந்தார். இதன் மூலம் மக்களிடம் தன் கட்சியை பிரபலப்படுத்தலாம் என கணக்கு போட்டு இருந்தார். ''ஆனால், கொரோனா ஊரடங்கால் அவரோட கணக்கு தப்பாகி விட்டது.

 ஊரடங்கு முடிந்தாலும், பொருளாதார சிக்கல் தீர, எத்தனை மாசம் ஆகும் என தெரியவில்லை. ''இந்த நேரத்தில், மக்களை சந்திப்பது சரியாக இருக்காது என நினைக்கிறார். ‘இன்னும் ஒரு வருஷத்துல, தேர்தல் வருகிறது. கூட்டி, கழித்து பார்த்தால் கணக்கு தப்பாக வருகிறது என குழப்பத்தில் இருக்கிறாராம் ரஜினி. அவருக்கு மட்டுமல்ல எதிர்கட்சிகளுக்கும் இந்த ஆண்டு தான் முக்கியமான நேரம். அவர்களும் தம்மை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமா என தலை சுற்றி வருகிறார்கள்.