Asianet News TamilAsianet News Tamil

சொந்த ஊரில் போட்டியிடும் ரஜினி.... வேப்பன ஹள்ளி தொகுதிக்கு குறி..!

2021ல் நடைபெற உள்ள சட்டமன்றப்பொதுத்தேர்தலில் ரஜினிகாந்த் தனது பூர்விகம் ஊர் அடங்கியுள்ள தொகுதியில் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

Rajini contesting in his hometown
Author
Tamil Nadu, First Published Feb 11, 2020, 5:52 PM IST

2021ல் நடைபெற உள்ள சட்டமன்றப்பொதுத்தேர்தலில் ரஜினிகாந்த் தனது பூர்விகம் ஊர் அடங்கியுள்ள தொகுதியில் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள நிலையில் வரும் தமிழ் புத்தாண்டில், மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தி, கட்சியின் பெயர், கொடியை, ரஜினி அறிமுகம் செய்ய உள்ளார். 

Rajini contesting in his hometown

சமீபத்தில் வெளியான தர்பார் படத்தின் ஒரு காட்சியில், 'என் சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம்' என ரஜினி கூறும் காட்சி இடம் பெற்றிருந்தது. கிருஷ்ண கிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்குள் தான், நாச்சிக்குப்பம் கிராமம் வருகிறது. இங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த ஊர் வேப்பன ஹள்ளி தொகுதியில்  அடங்கி இருக்கிறது. அங்கு ரஜினி போட்டியிட்டால், கடும் போட்டியின்றி வெற்றி பெற்று விடுவார். இதனைமனதில் கொண்டு அந்தத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். Rajini contesting in his hometown


கடந்த, 2011 மற்றும், 2016ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், வேப்பனஹள்ளி தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இப்போது அந்தத் தொகுதியில் திமுக ஏம்.எல்.ஏ.,வாக முருகன் இருந்து வருகிறார். அவர் அதிமுக வேட்பாளர் ஹேமந்த் குமாரை கடந்த தேர்தலில் தோற்கடித்தார். ஆகையால் அந்த தொகுதியில் ரஜினி போட்டியிட இருப்பதால் தி.மு.க கலக்கமடைந்து வருகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios