Asianet News TamilAsianet News Tamil

கஜா புயலுக்கு மத்திய அரசு அளித்த நிதி பத்தவே பத்தாது... புலம்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கஜா புயலுக்கு மத்திய அரசு அளித்த நிதி போதாது, இன்னும் அதிகமாக கிடைத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Rajaendra Balaji Exclusive interview on Gaja Cyclone
Author
Chennai, First Published Dec 4, 2018, 10:05 PM IST

கஜா புயலில் நிலைகுலைந்த டெல்டா மாவட்டங்களின் சோகம் இன்னமும் தீர்ந்தபாடில்லை. கடந்த 16ம் தேதி நாகப்பட்டிணம், வேதாரண்யம் இடையே கரையை கடந்த புயல் 6 மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டு சென்றது. அதிவேக காற்றுக்கு 63 பேர் பலியாகினர். புயல் வீசிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மரங்கள் வீழ்ந்தன. 57 ஆயிரம் குடிசை வீடுகளும், 31 ஆயிரம் ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்ததாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. ஒரு லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. சுமார் ஒரு 
லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர்சேதம் அடைந்தது.

புனரமைப்புக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என மத்திய அரசிடம் முறையிட்டார். முதற்கட்டமாக ₹200 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு. 

இந்நிலையில், சிவசாசியில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அமைக்கும் கூட்டணி, இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து  தேர்தல்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

மேலும், கஜா புயலுக்கு மத்திய அரசு அளித்த நிதி போதாது, முழு நிவாரண நிதியை விரைவில் அளிக்க வேண்டும் என  கூறியுள்ளார். மேலும், நல்லது செய்தால் பாராட்டுவோம், தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம், நாங்கள் யாருக்கும் ஏவலாளிகளும் இல்லை, காவலாளிகளும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios