கொரோனா வைரஸில் அச்சுறுத்தல் குறித்து ஒன்றை மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்ட தகவல் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகிவருகிறது. 
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவருகிறது. மக்கள் பொதுஇடங்களுக்கு வராதபடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. டிசம்பர், ஜனவரியிலேயே சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்திலிருந்த நிலையில், இந்தியாவில் முன்கூட்டியே சமூக விலகலைக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.


இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒன்றரை மாதங்களுக்கு முன்னால், பிப்ரவரி 12 அன்று கொரோனா வைரஸ் தொடர்பாக எச்சரித்து வெளியிட்ட ட்விட்டர் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. அன்றைய தினம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது என்னுடைய உணர்வு. சரியான நேர நடவடிக்கையும் முக்கியமானது.” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.


சுமார் ஒன்றரை மாதத்துக்கு முன்னரே ராகுல் காந்தி கொரோனா வைரஸ் குறித்து மிகவும் கடுமையாக எச்சரித்திருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில மேற்கொண்டு வந்தாலும், கடந்த 2 வாரங்களாகத்தான் இந்தியாவில் நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. இதை வைத்துதான் தற்போது ராகுல் காந்தி ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்விட்டர் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. இதை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல், பல தரப்பினரும் ஷேர் செய்துவருகிறார்கள்.