மோடியை மரண கலாய் கலாய்த்து வீடியோ போட்ட ராகுல்... அந்த கொடுமைய நீங்களே பாருங்க

கேலி செய்து வெளியிட்ட வீடியோவில், முதலில் பிரதமரின் கிராமபோன் குறித்த பேச்சும், அதனைத் தொடர்ந்து நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட ராகுல்காந்தியின் குடும்பத்தினர் பெயரை பல முறை குறிப்பிட்டு பல்வேறு இடங்களில் அவர் பேசிய காட்சிகளும் உள்ளன. அந்த வீடியோவை பார்த்து மகிழ்வதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் என்று ராகுல் கூறியுள்ளார். 

First Published Dec 11, 2018, 6:40 PM IST | Last Updated Dec 11, 2018, 6:40 PM IST

பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதைத் தொடர்ந்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.  கடந்த முறை வெற்ற இடங்களை காட்டிலும் வட மாநிலங்களில் பாஜவுக்கு பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளதால், குஷியாகி விட்டது. 

கடந்த அக்டோபர் மாதம் பாஜகவினரிடையே வீடியோ காணொளி மூலம் பேசிய மோடி, கீறல் விழுந்த கிராமபோன் போன்று ராகுல்காந்தி ஒரே குற்றச்சாட்டை திரும்ப திரும்ப கூறுவதாகவும், குழந்தைதனமான அவரது பேச்சை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். 
 
பிரதமர் மோடி பேசிய வீடியோவை ராகுல் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கேலி செய்து வெளியிட்ட வீடியோவில், முதலில் பிரதமரின் கிராமபோன் குறித்த பேச்சும், அதனைத் தொடர்ந்து நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட ராகுல்காந்தியின் குடும்பத்தினர் பெயரை பல முறை குறிப்பிட்டு பல்வேறு இடங்களில் அவர் பேசிய காட்சிகளும் உள்ளன. அந்த வீடியோவை பார்த்து மகிழ்வதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பகிருங்கள் என்று ராகுல் கூறியுள்ளார். 

Video Top Stories