இன்று போய் நாளை மறுநாள் வாங்க... புகழேந்தியை அலையவிடும் வருமான வரித்துறை! (வீடியோ)
கடந்த 9 ஆம் தேதி, சசிகலா குடும்பத்தினர் உட்பட, 180 க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இன்று கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, டாக்டர் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
மேலும் வருமான வரித்துறையினர் சார்பில் கேட்கப்பட்ட ஒரு சில கோப்புகளை இவர்கள் வழங்கியதாகத் தெரிகிறது. விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிகாரிகள் கேட்டவற்றை சமர்ப்பித்துள்ளதாகவும். மீண்டும் நாளை மறுநாள் வரும் படி அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
புகழேந்தி பேட்டி (வீடியோ)