தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுளளதையடுத்து பொது மக்கள்  தாகத்தால் தவியாய் தவித்து வருகின்றனர். பெண்கள் காலிக்குடங்களுடன்  தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர்.

தமிழகத்தில் மழை வேண்டி அதிமுகவினர் இன்று கோயில்களில் யாகம் நடத்தி வருகின்றனர். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி தமிகம் முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறையால் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் . தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏராளமான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்து வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகள் தண்ணீர் பிரச்சனையைக் காரணம் காட்டி சில பள்ளிகள் விடுமுறை அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.