கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும்  எடுக்கப்பட்டு வரும் நிலையில் ,  மருத்துவர்களுக்கு உதவியாக திருச்சி கொரோனா வார்டில்  ரோபோக்களை பயன்படுத்த  தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று அதை வழங்க  முன்வந்துள்ளது .  இது மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும்   அந்த மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

 

அன்றாடம் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது ,  இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் விதமாக படுக்கைகளை அதிகரித்து வருவதுடன்  வென்டிலேட்டர்கள்,  கையுறைகள் தேவையான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது .  அதே நேரத்தில் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்க அதிக மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் கூடுதலாக மருத்துவர்களை பணியமர்த்தவும்  அரசு திட்டமிட்டு வருகிறது . இந்நிலையில்  மாவட்டந் தோறும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது . 

 

இந்நிலையில் திருச்சி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில்  மருத்துவர்களுக்கு உதவியாக நான்கு ரோபோக்களை வழங்க திருச்சியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது .  அதாவது திருச்சியில் குரானா வைரஸ்  பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் தனிமை வார்டில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதற்காக இந்த ரோபோட்டுகள் பயன்படும் எனவும்  அந்த தனியார் மென்பொருள் நிறுவனம் தெரிவித்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் டீன் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் இந்த ரோபட்டுகள் கொரோனா வார்டில் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார் .