பிரதமர் மோடியின் தாயார் நடனமா இது..?வைரலாகும் (வீடியோ)
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிரா பென் தனது வீட்டில் நடனம் ஆடி தீபாவளியைக் கொண்டாடுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், இந்த வீடியோ பதிவை, உண்மை என்று நம்பி, அந்த 97 வயது பெண்மணி மோடியின் தாயார்தான் என்று நம்பி புளகாங்கிதமடைந்துள்ளார் கிரண் பேடி. பின்னர், அதற்கு பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்து, மெய் சிலிர்க்கும் வகையில் ஒரு கருத்தையும் போட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.
அதில் அவர் கூறியிருந்த கருத்தில், இந்த வீடியோவில் இருப்பவர் நம் பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார். முதிர்ந்த இந்த வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார் என்று கிரண் பேடி ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருடைய இந்தக் கருத்தும், இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் அவ்வாறு நடனமாடுவது போன்று வெளியான வீடியோ போலியானது என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் உள்ள வயதான பெண்மணி, பிரதமர் மோடியின் தாயார் இல்லை என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ தொகுப்பு இது...