Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் செய்ய சொல்லி விஞ்ஞானிகளிடம் கேட்ட மோடி...!! நாட்டை வலிமையாக்க பிரதமர் போட்ட பயங்கர திட்டம்...!!

சாமானிய மக்களின் வாழ்க்கை  தரத்தை மேம்படுத்துவதற்கு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பாடுபடவேண்டும் , என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 

prime minister modi participating science and technology enclave at Delhi for development
Author
Delhi, First Published Feb 16, 2020, 11:49 AM IST

ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமூகப் பிரச்சினைகளை தீர்க்க விஞ்ஞானிகளும் , ஆராய்ச்சியாளர்களும் முன்வரவேண்டும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் .  இந்தியா தற்போதைய எதிர்கொண்டுவரும் பல பிரச்சினைகளில் மிக முக்கிய பிரச்சனையாக ஊட்டச்சத்து குறைபாடு இருந்து வருகிறது . இது சமூக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தி வருவதால் , இதைத்  தீர்க்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது இந்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் கூட்டம்  நடைபெற்றது , அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார் ,  பின்னர் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . 

prime minister modi participating science and technology enclave at Delhi for development

அதன் முழு விவரம்:-  இந்த கூட்டத்தில் மெய்நிகர் ஆய்வு கூடங்களை உருவாக்குதல் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது ,   இதன் மூலம் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மாணவர்களிடம் அறிவியலைக் கொண்டு செல்ல முடியும் .  அறிவியலை நோக்கி மாணவர்களை ஈர்ப்பது, அடுத்த  தலைமுறையினரிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவது . என  முன்னேற்றத்திற்கான தேவைகளை நிறைவேற்ற விஞ்ஞானிகள் பாடுபடவேண்டும் .   விவசாயப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றின்  மூலம் இந்தியா எதிர்கொண்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமகால சமூகப்  பிரச்னைகளைத் தீர்ப்பதில் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு கவனம்  செலுத்த வேண்டும். தேவையான சில சவால்களாக உருவெடுத்துவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பதற்கு 5ஜி செயற்கை நுண்ணறிவு ,  குறைந்த செலவில் நீடித்து உழைக்கும் பேட்டரிகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள தேவையானவற்றில் விஞ்ஞானிகள் சரியான கவனம் செலுத்த வேண்டும் .

 prime minister modi participating science and technology enclave at Delhi for development

உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உருவாக்க நவீன அறிவியலையும் பாரம்பரிய அறிவியலையும் இணைக்க வேண்டியது இன்றியமையாதது . சாமானிய மக்களின் வாழ்க்கை  தரத்தை மேம்படுத்துவதற்கு அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பாடுபடவேண்டும் ,  என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இந்நிலையில்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று தொடங்கியது இந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர் மற்றும் அவரது பெற்றோர்கள் ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவருடைய பல மாத கடின உழைப்பும் தயாரிப்பு நிச்சயமாக மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும் எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியாக தேர்வு எழுதுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios