முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார். 

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு யானைகவுனியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு வராது என முதல்வர் உறுதியளித்துள்ளதால் இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  

காவிரி வேளாண் மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேண்டும் என்ற அரை நூற்றாண்டு கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு அதிக மாசு வெளியிடும் எந்த நிறுவனத்தையும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். மேலும், திமுக தற்போது கருணாநிதியின் கட்சியாக அல்லாமல், மு.க.ஸ்டாலின் கட்சியாக இருந்து பிரசாந்த் கிஷோரின் கட்சியாக மாறி இருக்கிறது. திமுகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.