கூட்டணிக்கு வர பல டிமாண்டுகளை வைத்த புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமியின்  லெட்டர்பேடில் அவரே எழுதி கூட்டணிக்கு வர பல கோரிக்கைகளை வைத்ததைப்போல அதிமுக ஐடி விங்க் ஒரு கடிதத்தைப் பரப்பியது. அடுத்து தனித்து போட்டியிட உள்ளதாகவும் இன்னும் சில தில்லாலங்கடிகளை செய்து அதிமுக கூட்டணிக்கு கிருஷ்ணசாமியை இழுத்து வந்ததில் அதிமுக ஐடி அணிக்கு முக்கிய பங்கு உண்டு.

அதிமுக., அணியில், தகவல் தொழில்நுட்ப செயலராக உள்ள ராமச்சந்திரன், சமீபத்தில் சென்னை, மயிலாப்பூர் பகுதியில் தனியாக அலுவலகம் திறந்திருக்கிறார். தி.மு.க.,வின் சமூகவலைதள பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'பிரபாகரனின் மரணமும்; தி.மு.க.,வின் பேரமும்...’, ’தி.மு.க.,வின் கையெழுத்தும், மக்களின் தலையெழுத்தும்' என்கிற தலைப்புகளில் வீடியோ காட்சிகளை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதற்கு, கட்சி தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், மாவட்ட வாரியாக, 'குரூப் அட்மின்'களை வைத்து, ஒரு நாளைக்கு, ஒன்றரை லட்சம் பேரிடம், இந்த பதிவுகளை கொண்டு செல்ல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக ஐடி அணியின் இந்த வீடியோக்கள் திமுகவுக்கு ஜெர்க்கை ஏற்படுத்தி உள்ளது.