Asianet News TamilAsianet News Tamil

உலகிற்கே கேடு விளைவிக்ககூடிய மிக ஆபத்தான மூன்று நாடுகள்...!! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா...??

பாஜக அரசின் மற்றுமொரு மாத்தியோசி திட்டம்:-  காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் உச்சி மாநாடு சென்ற மாதம் ஸ்பெயின் நாட்டிலுள்ள மேட்ரிட் நகரத்தில் எந்தவிதமான முன்னெடுப்புகள் குறித்தும் அறிவிக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.

pooulagin nanbargal organization statement  against bjp plans and execution's
Author
Chennai, First Published Jan 17, 2020, 12:23 PM IST

பாஜக அரசின் மற்றுமொரு மாத்தியோசி திட்டம்:-  காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகளின் உச்சி மாநாடு சென்ற மாதம் ஸ்பெயின் நாட்டிலுள்ள மேட்ரிட் நகரத்தில் எந்தவிதமான முன்னெடுப்புகள் குறித்தும் அறிவிக்காமல் தோல்வியில் முடிவடைந்தது. இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவை, சூழலை மாசுபடுத்தக்கூடிய நாடுகளின் முதல் மூன்று இடங்களில் உள்ள அமெரிக்கா,  சீனா,  இந்தியா போன்ற நாடுகள்தான். அதிலும் கூடுதல் வேடிக்கை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த "நிலை அறிக்கைதான்", அது நகைச்சுவையின் உச்சம்.

பொதுவாக பாஜ அரசிற்கு ஒரு விஷயத்தை நிறைவேற்றமுடியாமல் போனால் கணக்கீடும் முறையை மாற்றி வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதாக அறிவிக்கும் வழக்கம் உண்டு. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதை தெளிவாக கணக்கிட்டுக்கொண்டிருந்தது,  அது எத்தனை வழி சாலையாக இருந்தாலும் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு சாலை  போடப்பட்டால் அது ஒரு கி.மீட்டர் நெடுஞ்சாலைதான் என்றுதான் கணக்கில்கொள்ளப்படும்.

 pooulagin nanbargal organization statement  against bjp plans and execution's

ஆனாலை பாஜ பொறுப்பேற்றவுடன் அந்த முறையை மாற்றி, 8 வழிச்சாலை ஒரு கிலோ மீட்டருக்கு போடப்பட்டால் அது 8 கிலோ மீட்டராக கணக்கீடும் முறையை கொண்டுவந்து அதை சாதனை என்று போற்றியது. ஜிடிபி கணக்கீட்டையும் அப்படிதான் மாற்றியது. இப்போது புதிப்பிக்கக்கூடிய ஆற்றல் துறையிலும் அப்படிதான். இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 83,000 மெவா புதிப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் மூலம் உற்பத்தியாவதாகவும், ஆனால் இந்தியா பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஒப்புக்கொண்ட இலக்கான 1,75,000 மெவா உற்பத்தியையும் தாண்டி வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் 2,25,000 மெவா உற்பத்தியை புதிப்பிக்கக்கூடிய எரிசக்தியின் மூலம் நிறைவேற்றிவிடும் என்று மேட்ரிட் நகரில் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.  

கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் மூலம் நடைபெறும் மின்னுற்பத்தி   திட்டங்களை நிறுவுவது கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது,  அதுவும் குறிப்பாக சூரியசக்தி திட்டங்கள்.  2017-18ஆம் ஆண்டில் 9,400மெகா.வா அளவிற்கு சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டன, 2018-19 ஆம் ஆண்டில் அது 6,500 மெ.வா குறைந்தது, இந்த ஆண்டு இதுவரை 2,900 மெகாவாட் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது.  சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் பாஜகவிற்கு புதிது அல்ல, இதை எப்படி எதிர்கொள்வது? அதுதான் இருக்கவே இருக்கிறது மாத்தியோசி... 

pooulagin nanbargal organization statement  against bjp plans and execution's

இதுவரை 25மெவா க்கு கீழ் உள்ள நீர்மின் திட்டங்களே புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் திட்டங்களாக கருதப்பட்டன. பெரிய நீர் மின்திட்டங்களை நிறுவ பெரிய அணைகள் கட்டப்பட்டன, அந்த அணைகள்  காடுகளை அழித்து உருவாக்கப்பட்டவை, அதனால் சூழலுக்கு எதிரானதாக பெரிய நீர்மின் திட்டங்களை வகுத்துவைத்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 25மெவா க்கு மேல் உற்பத்தி செய்யும் நீர் மின்திட்டங்களும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் கீழ் கொண்டுவரப்பட்டன. 

pooulagin nanbargal organization statement  against bjp plans and execution's

இப்படி செய்ததன் மூலம் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி சடாரென்று 45,000 மெவா அதிகரித்தது.  இப்போது என்ன, மோடியின் அரசு சூழலைக் காக்க புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் மூலம் எவ்வளவு மின்னுற்பத்தி செய்கிறது என்று பார்த்தீர்களா என்று விளம்பரங்கள் வரும்.  வைட் போர்டு முன்னர் நின்று பேசுவோர், பாத்தீர்களாக தமிழக மாணவர்களே மோடியின் அரசை என்று கூப்பாடு போடுவார்கள். அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் மோடியை எதற்கெடுத்தாலும் குறை சொல்ல கூடாது என்று அறிக்கை வாசிப்பார்கள்.என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினரும் சுற்று சூழல் ஆர்வலுருமான  சுந்தர்ராஜன், தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios