Asianet News TamilAsianet News Tamil

போலீஸ் மரணத்திலும் அரசியல் செய்யும் கேடுகெட்ட தலைவர் மு.க.ஸ்டாலின்... அமைச்சர் ஜெயகுமார் விளாசல்..!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மார்த்தாண்டம் சந்தைரோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் 
இருந்த எஸ்.ஐ வில்சனை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

police officer murder... minister jayakumar said about mk stalin
Author
Tamil Nadu, First Published Jan 12, 2020, 5:46 PM IST

திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மார்த்தாண்டம் சந்தைரோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த எஸ்.ஐ வில்சனை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

police officer murder... minister jayakumar said about mk stalin

இதனிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  இதனைதொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். 

police officer murder... minister jayakumar said about mk stalin

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்பது மோசமான வாய்ப்பாகும். எனினும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறி, அதிமுக ஆட்சியினர் தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். 

police officer murder... minister jayakumar said about mk stalin

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்;- எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்த ஸ்டாலினின் கருத்து கண்டனத்திற்குரியது. காவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும், யாருடைய ஆட்சியில் காவல் துறையினரை கண்டு கொள்ளவே இல்லை என்பதும், காவல்துறையினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும், அது பற்றி தி.மு.க. தலைவர் எடுத்துரைக்க வேண்டிய அவசியமே இல்லை.

police officer murder... minister jayakumar said about mk stalin

மேலும், திமுக ஆட்சியின்போது காவல் துறையினர் பட்ட இன்னல்களைப் பற்றி பல்வேறு உதாரணங்களை கூறிக்கொண்டேபோகலாம். இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, திமுக தலைவரின் டுவிட்டர் பதிவு, மக்கள் சிரிக்கத்தான் வகை செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios