21 ஆண்டுக்குப் பின் போயஸ் இல்லத்தில் நடந்த அதிரடி ரெய்டு! (வீடியோ)
கடந்த 9 ஆம் தேதி, சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் 187 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீர் என வருமான வரித் துறை அதிகாரிகள், போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தில் சோதனை நடத்தினர். ஏற்கெனவே இதே போல் ஒரு முறை வருமான வரித்துறை அதிகாரிகள் 21 ஆண்டுகளுக்கு முன் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ: