வளர்மதிக்கு எதுக்கு பெரியார் விருது? விளக்கம் கேட்டு அடம் பிடிக்கும் தீபா
2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பெரியாரை இதைவிட கேவலப்படுத்தமுடியாது என்று நெட்டிசன்கள் செய்து வரும் கிண்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா எடப்படியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இந்த விருதுப் பட்டியலில்? முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ள பெரியார் விருது தான் அது. 2017ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார், இதோ; தமிழ் வளர்ச்சிக்கும், இலக்கியத்துக்கும் தொண்டாற்றிய பேரறிஞர்களுக்கு, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது ,
முன்னாள் அமைச்சர் திருமதி.பா.வளர்மதி அவர்களுக்கு #பெரியார்_விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது...
உள்ளவாறே திருமதி.பா.வளர்மதி அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காகவும்,
தமிழ் இலக்கியத்துக்காகவும் ஆற்றிய
அரிய பணிகள் என்னெவென்று அரசு மக்களுக்கும் விவரித்தால் நன்றாக இருக்கும்...இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.