தி.மு.க முன்னாள் அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! பரபரப்பு (வீடியோ)

petrol bomb put the dmk mla house
First Published Oct 28, 2017, 6:59 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



சேலம் மாவட்ட தி.மு.க-வில் வீரபாண்டி ராஜா கோஷ்டி மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் கோஷ்டிகளுக்கு இடையே பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் உச்சகட்டமாக நேற்று இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். 

இந்நிலையில், சேலம் 27வது வார்டு அரிசிப்பாளையத்தில் ராஜேந்திரன் தரப்பினர் தி.மு.க உறுப்பினர் படிவம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரபாண்டி ராஜா ஆதரவாளரான செல்வகணபதி தரப்பினரும் உறுப்பினர் படிவம் கொடுத்து சேர்த்துக்கொண்டிருந்தனர். 

இதனால் அங்கு மோதல் ஏற்படும் நிலை உருவானது. உச்சபட்சமாக இரு தரப்பினரும் கத்தியால் குத்திக்கொண்டார்கள். இதில் ராஜேந்திரன் தரப்பில் சுரேஷ், பிரகாஷ் ஆகியோருக்கும் டி.எம்.செல்வகணபதி தரப்பில் வினோத்குமார், வரதன் ஆகியோருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதை அடுத்து அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தற்போது  முன்னாள் எம் பி செல்வகணபதி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டார்கள். குண்டு வெடிப்பில் செல்வகணபதி வீட்டில் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் கார் எரிந்து சேதமடைந்துள்ளது.  இந்த குண்டுவீச்சுக்கு உள்கட்சி மோதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.