Asianet News TamilAsianet News Tamil

பெரியார் - ராமர் ஊர்வலத்தில் உண்மையில் நடந்தது என்ன?: மூன்று நபர்கள் சொல்லும் மூன்று பகீர் விஷயங்கள்..!

ஆன்மிக உச்சம் ராமரையும், நாத்திக உச்சம் பெரியாரையும் ஒரே நேர்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி போர் புரிய வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். தை பொங்கல் சமயத்தில் துக்ளக் பத்திரிக்கை விழாவில் அவர் கொளுத்திப் போட்ட ‘பெரியார் ஊர்வலத்தில் ராமர் சிலைக்கு செருப்படி’ எனும் தகவலால் பற்றி எரிகிறது விவகாரம். 
 

Periyar - What really happened in the Rama procession... three people say
Author
Tamil Nadu, First Published Jan 25, 2020, 6:11 PM IST

ஆன்மிக உச்சம் ராமரையும், நாத்திக உச்சம் பெரியாரையும் ஒரே நேர்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி போர் புரிய வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். தை பொங்கல் சமயத்தில் துக்ளக் பத்திரிக்கை விழாவில் அவர் கொளுத்திப் போட்ட ‘பெரியார் ஊர்வலத்தில் ராமர் சிலைக்கு செருப்படி’ எனும் தகவலால் பற்றி எரிகிறது விவகாரம். 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து, 1971ம் ஆண்டில் அந்த ஊர்வலம் சேலத்தில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட மூன்று  பேர் இது பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அதுவும்  பெரியாரிஸ்ட்டுகளான அவர்களின் கருத்தை புலனாய்வு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் வரும் விபரங்கள்.... “நான் ராமர் சிலையை செருப்பால் அடித்தேன். 1971ல் ராமலீலா எதிர்ப்பு மாநாடு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த போது எனக்கு 32 வயது. அப்போது பத்து டிராக்டர்களில் ராமர் சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. Periyar - What really happened in the Rama procession... three people say

நான் ஒரு டிராக்டரின் பொறுப்பாளராக இருந்தேன். அப்போது அங்கு வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எங்கள் ஊர்வலத்தின் மீது செருப்பை வீசினர். ஆனால் எங்கள் மீது படாமல், ராமர் சிலை மீது ஒரு செருப்பு பட்டது. இப்படி நிறைய செருப்புகள் வந்தன. அதில் ஒன்று என் முகத்தின் மீது விழுந்தது. நான் அந்த செருப்பை எடுத்து ராமர் சிலையை அடிக்க துவங்கினேன். என் பொறுப்பிலான டிராக்டரில் இருந்த ராமர் சிலையை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களும் அடித்தனர்.” என்கிறார் திருச்சி செல்வேந்திரன். 

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி “அந்த ஊர்வலத்தில் ராமர் படம் மட்டும்தான் இடம்பெற்று இருந்தது. அதுவும் சிலை மாதிரி உருவம் கட்டையில் செய்யப்பட்டு, அதற்கு ராமர் மாதிரி வேடமிட்டிருந்தார்கள். உருவம் நிர்வாணமாக இல்லை. உடையோடுதான் இருந்தது. சீதை படமும் இல்லை. ராமர் படத்தை செருப்பால் அடித்தது யார் என்பது இன்னமும் தெளிவாக இல்லை. சீதை நிர்வாணம்! என்று ரஜினி பேசுவது உள்நோக்கத்தை கொடுக்கிறது.”என்கிறார்.

Periyar - What really happened in the Rama procession... three people say

திராவிடர் கழக பகுத்தறிவு ஆசிரியர் அணியை சேர்ந்த கந்தசாமி “ஊர்வலம் நடந்தபோது ரோட்டில் நின்ற ஜன சங்கத்தினர் ‘ராமரை அவமதிக்கலாமா?’ என்று எங்கள் மீது செருப்பை வீசினர்.  ஆனால் அது ராமர் படத்தின் முன் விழுந்தது. உடனே திருச்சி செல்வேந்திரன் அதை எடுத்து ராமர் படத்தை அடித்தார். பின் பலரும் அடித்தார்கள் ஆர்வமிகுதியில். ஊர்வலம் முடிந்த பின் தொண்டர்களைக் கூப்பிட்ட பெரியார் ‘நம்ம கூட்டத்தில் இப்படி அநாகரிகமாக நடக்கலாமா?’ என்று கடிந்தார்.” என்றிருக்கிறார். ஆக இப்படியாக ஓடுகிறது இந்த விவகாரம். 

Follow Us:
Download App:
  • android
  • ios