Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரம் தலைமறைவு….. சுப்பிரமணியன்சுவாமி அதிரடி சந்தேகம் !!

முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக பாஜக எம்.பி. சுப்ரமணிய சாமி டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

P.Chidambaran obscond
Author
Delhi, First Published Aug 21, 2019, 10:11 AM IST

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை  டெல்லி உயர்நீதிமன்றம்  நேற்று  தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதே நேரத்தில் நேற்று அவருக்கு ஜாமீன் மறக்கப்பட்டதையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் திரும்பிச் சென்றுவிட்டனர். அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

P.Chidambaran obscond

இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2 மணி நேரத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

P.Chidambaran obscond

இந்நிலையில் பாஜக எம்.பி. சுப்ரமணியன்சுவாமி  தனது டுவீட்டரில் "நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலைவிரித்து தேடி வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமார் ஒன்றரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

P.Chidambaran obscond

மற்றொரு டுவீட்டில், "ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கை விசாரித்தது யார்? அமலாக்கத்துறையின் இணை இயக்குனர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். பதவி உயர்வு மறுக்கப்பட்டு, லக்னோவிற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. கலியுகம்". என அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியசாமியின் இந்த டுவீட்டை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios