Asianet News TamilAsianet News Tamil

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும்... ப.சிதம்பரம் சொல்லும் 10 யோசனைகள்..!

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதார இழப்பு மற்றும் ஏழை, எளியவர்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு எப்படியெல்லாம் மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என நிதியமைச்சர் ப சிதம்பரம் 10 யோசனைகளை அறிவித்துள்ளார்.

p.Chidambaram suggests 10-point plan
Author
Chennai, First Published Mar 26, 2020, 9:34 AM IST

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொருளாதார இழப்பு மற்றும் ஏழை, எளியவர்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு எப்படியெல்லாம் மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என நிதியமைச்சர் ப சிதம்பரம் 10 யோசனைகளை அறிவித்துள்ளார்.

திட்டங்கள் விவரம்;-

* பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித்தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும்.

* குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடம் இருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயியின் குடும்பத்திற்கும் ரூ.12 ஆயிரம் உடனே வழங்க வேண்டும்.

* மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும்.

* ஜன்தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் (நகர்ப்புற வங்கி கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும்.

* ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க வேண்டும்.

* ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளையோ, ஊதியத்தையோ குறைக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.

* மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும், ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு திறந்து அந்த கணக்கில் ரூ.3,000 உடனே வழங்கவேண்டும்.

* எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்கவேண்டும்.

* வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை இறுதி நாட்களை ஜூன் 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.

* மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்கள், சேவைகள் மீது உள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 5 சதவீதம் உடன் குறைக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios