Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் மகனா இப்படி ? செம கடுப்பில் அதிமுக சீனியர்கள் !!

தேனி தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் வகையில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி.,  புதிய செயலி ஒன்றை தொடங்கி பொது மக்களின் பாராட்டைப் பெற்று வருவதால் அதிமுகவில் உள்ள சில சீனியர்கள் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
 

ops son open new app for theni people
Author
Theni, First Published Sep 17, 2019, 10:21 PM IST

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோற்றுப் போனது. தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக துணை முதலமைச்சர்  ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகள், தேவைகள், தங்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகளை உடனுக்குடன் தெரிவிக்க ரவீந்திரநாத்குமார், "OPR உங்களுடன் நான்" என்ற செயலியை தொகுதி மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். 

ops son open new app for theni people

தற்போது இந்த செயலியை அறிமுகம் செய்து இருப்பது அந்த தொகுதி மக்கள் வரவேற்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இளம் அரசியல்வாதியான ரவீந்திரந்த்குமாரின் செயலை பார்த்து அதிமுக கட்சியில் இருக்கும் சீனியர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர் 

இதற்கு முன்பு ஆசிரியர் தினத்தன்று தான் படித்த பள்ளிக்கு சென்று தனக்கு எடுத்த ஆசிரியரிடம் ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு, அந்த தொகுதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. 

ops son open new app for theni people

மேலும் சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய ரவீந்திரநாத் குமார், முதலில் நான் ஒரு இந்து.. அப்புறம் தான் மற்றதெல்லாம் என பேசி பாஜகவையும் கவர்ந்துள்ளார்.

இதே போல் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தேனி சென்ற போதும் அவரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தது அரசியல் நாகரிகமாக பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் மகனின்  இந்த செயல்பாடுகள் அதிமுகவில் இருக்கும் பல சீனியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios