Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சர் பதவிக்கு குறி... சாமியாரின் காலில் விழுந்த ஓ.பி.ஆர்..!

 ஓ.பி.ஆர், இந்த மஹாசிவராத்திரி விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி என்கிற மாண்பையும் மறந்து, பொதுவெளியில் சத்குருவின் காலில் விழுந்துள்ளார். 

OPR who fell at the feet of the prelate, targeting the Union minister
Author
Tamil Nadu, First Published Feb 22, 2020, 11:47 AM IST

தமிழகம் முழுவதும் மஹாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய வழிபாடு நடைபெற்றது. அதே போல, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 26 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.OPR who fell at the feet of the prelate, targeting the Union minister

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் லெபனான் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சியும், பிரபல பாடகர் அந்தோணி தாசன் பாடலும், ‘கபீா் கஃபே’குழுவினர் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன் உற்சாகமாக நடைபெற்றது.

இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி. ரவீந்திரநாத், நடிகை காஜல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் எம்.பி.ரவீந்திரநாத், ஜக்கி வாசுதேவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அந்த புகைப்படம் இணைய தளத்தில் பரவி வருகிறது.

 OPR who fell at the feet of the prelate, targeting the Union minister

எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என ஒற்றைக்காலில் தவமிருக்கும் ஓ.பி.ஆர், பாஜகவுடன் நெருக்கத்தில் இருக்கும் சத்குருவிடம் நட்பு பாராட்டி வருகிறார். காவிரி கூக்குரல் நிகழ்ச்சிக்காக ஈஷா யோகாவின் சத்குரு ஜக்கி வாசுதேவ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். அப்போது இருசக்கர வாகனப் பேரணியில்  ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டார். ஈஷா மைய சத்குருவின் வழியையும் நாடினால் தமக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்பதால் தொடர்ந்து சத்குருவுடன் தோழமை பாராட்டி வரும் ஓ.பி.ஆர், இந்த மஹாசிவராத்திரி விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி என்கிற மாண்பையும் மறந்து, பொதுவெளியில் சத்குருவின் காலில் விழுந்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios