Asianet News TamilAsianet News Tamil

சிஏஏ-வால் கிடைத்த வாய்ப்பு... அப்பா விட்டதை பிடித்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத்..!

அப்பாவுக்கு கொடுத்த இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றதால் தந்திரமாக பேசி தனக்கு போலீஸ் பாதுகாப்பை வாங்கி விட்டாரே” எனப்பேசிக் கொள்கிறார்கள் அதிமுகவினர். 
 

Opportunity to get the CAA ... Father's favorite son is OP Raveendranath
Author
Tamil Nadu, First Published Feb 23, 2020, 5:52 PM IST

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். இதைக் கண்டித்து, கடந்த மாதம் கம்பம் வந்தஅவருக்கு எதிராக இஸ்லாமியர்கள் கறுப்புக்கொடி காட்டினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓ.பி.ரவீந்திரநாத்தை தாக்க முயன்றனர். இதனையடுத்து ஹெச்.ராஜாவை தேனி மாவட்டத்துக்கு அழைத்துவந்து போடியில் ஒரு ஊர்வலமும், பெரியகுளத்தில் ஒரு கூட்டமும் நடத்தினர்.

Opportunity to get the CAA ... Father's favorite son is OP Raveendranath

அப்போது இஸ்லாமியர்கள் தெருக்களில் வீட்டுக்கொரு போலீஸாரை நிறுத்தினர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ரவீந்திரநாத் குமார் தொகுதிக்கு வரும்போதெல்லாம் 2 எஸ்பி-க்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பந்தோபஸ்துக்கு வந்துவிடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “அப்பாவுக்கு கொடுத்த இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றதால் தந்திரமாக பேசி தனக்கு போலீஸ் பாதுகாப்பை வாங்கி விட்டாரே” எனப்பேசிக் கொள்கிறார்கள் அதிமுகவினர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios