Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் திறக்கணும்….எம்எல்ஏவின் அதிர்ச்சி ஆசை !!


தமிழக சட்டப் பேரவையில் இன்று பேசிய தமிழநாடு கொங்கு இளைஞர் பேரவை  எம்எல்ஏ தனியரசு , தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை  திறக்க வேண்டும்  என வலியுறுத்தினார்.

open mobile tasmac shops in  tamilnadu
Author
Chennai, First Published Jul 12, 2019, 9:02 PM IST

தமிழகத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்போற்ற போது தமிழகத்தில மதுக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவிப்படி சாலையோரம் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

open mobile tasmac shops in  tamilnadu
இந்நிலையில் தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் எனறும் கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் என்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ தனியரசு  பேசினார்.

open mobile tasmac shops in  tamilnadu
.
வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர். எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார்.  ஏழை விவசாயி, விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி  என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios