Asianet News TamilAsianet News Tamil

மக்களின் உயிரைக் காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் கொடுங்க.. டிடிவி.தினகரன்..!

தமிழகம் முழுவதிலும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்" என பதிவிட்டுள்ளார்.

one month special salary for 108 ambulance workers...ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published Apr 8, 2020, 5:07 PM IST

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என, தமிழக அரசை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்து. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்தவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இரவு பகலின்றி அயராமல் உழைத்து வருகின்றனர். ஆனால்,  மருத்துவத் துறை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கியது போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

one month special salary for 108 ambulance workers...ttv dhinakaran

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில்;- கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்" என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios