Asianet News TamilAsianet News Tamil

ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்தான் ! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !!

நாட்டிலேயே ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டும்தான் 1 கிலோ வெங்காயம் ரூ.25 க்கு விற்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்
 

one KG Onion 25 rupees
Author
Hyderabad, First Published Dec 9, 2019, 8:26 PM IST

இந்தியா முழுவதும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.100 ஐ தாண்டி உள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் வெங்காயம் கிலோ ரூ.150 க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். பல இடங்களில் வெங்காயத்தை திருடிய சம்பவங்களும் நிகழ்ந்து பரபரப்பை  ஏற்படுத்தியது. 

one KG Onion 25 rupees

இதே போல் மொத்த விற்பனையில் 1 கிலோ ரூ.250-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரூ.300-க்கும் இதேபோல் ரூ.25-க்கு விற்ற வெண்டைக்காய் தற்போது ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

வெங்காய விலையேற்றத்தை தடுக்க நம்மைவிட குறைந்த அளவில் விவசாயம் செய்யும் (12-15%), பாலைவனங்கள் அதிகமுள்ள ஈரான், எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நாட்டிலேயே ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டும்தான் வெங்காயம் கிலோ ரூ.25 க்கு விற்கப்படுவதாக அம்மாநில Kjyik;rr;h  ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

one KG Onion 25 rupees

இதுகுறித்து சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ‘வெங்காயத்தின் இந்த விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஆனால் உண்மை என்னவென்றால், ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ .25 என்ற அளவில் வழங்கப்படுகிறது, 

அதே நேரத்தில் சந்திரபாபு குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய உணவுகள் நிறுவனத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 200 க்கு விற்கப்பட்டதாக ஜெகம் மோகன் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios