Asianet News TamilAsianet News Tamil

ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு பென்சன் !! அதிரடி உத்தரவு பிறப்பித்து அசத்திய முதலமைச்சர் !!

ஆந்திர மாநிலத்தில் ஒரே குமும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு பென்சன் வழங்கலாம் என்ற புதிய உத்தரவை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் பிறப்பித்துள்ளார்.
 

one family twopension in andra
Author
Nagari, First Published Dec 16, 2019, 8:22 AM IST

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஒரு குடும்பத்தில் 65 வயதை கடந்த முதியவர் இருந்தால் அவருக்கு மட்டும் மாதந்தோறும் ஓய்வூதியம் (பென்சன்) வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஆந்திராவில் கடந்த மே மாதம்  ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது.

one family twopension in andra

இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி நிபந்தனைகளை தளர்த்தி, ஒரு குடும்பத்தில் ஒரு விதவை அல்லது ஒரு முதியவர் ஓய்வூதியம் பெற்றாலும், அதே குடும்பத்தில் ஒரு மாற்றுத்திறனாளி இருந்தால் அவருக்கும் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், முதியவர்களுக்கான ஓய்வூதிய வயது 65-ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

one family twopension in andra

முதியவர் மற்றும் விதவைகளுக்கு மாதந்தோறும் 2,250 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் ரூபாயும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
 one family twopension in andra
இதுமட்டுமின்றி கிராம பகுதிகளில் மாத வருமானம் ரூ.10 ஆயிரம், நகரங்களில் ரூ.12 ஆயிரம் பெறுபவர்களுக்கும், 3 ஏக்கர் விளைச்சல் நிலம், 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios