மத்திய பிரதேசத்தில், முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான, காங்கிரஸ்  அரசு அமைந்துள்ளது. இங்கு, செக்ஸ் வலை வீசி, உல்லாசமாக இருக்கும்போது அதை வீடியோவாக பதிவு செய்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மிரட்டப் படும் பிரச்னை, பூதாகரமாகி உள்ளது. 

உதாரணமாக என்னுடன் பழகிய ஒரு பெண், செக்ஸ் ஆசையை ஏற்படுத்தி, வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டுகிறார்' என, இந்துார் மாநகராட்சியைச் சேர்ந்த ஒரு பொறியாளர், போலீசில் புகார் கூறியிருந்தார்.

அந்த பெண்ணை விசாரித்த போது தான், பின்னணியில் மிகப் பெரிய கும்பலே உள்ளது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில்,போபாலை சேர்ந்த,ஒரு பெண் மற்றும் அவருடைய கணவர், இந்த மோசடியின் மூளையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

போபாலைச் சேர்ந்த இந்த தம்பதி, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். பின்னர் அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்திய பின், செக்ஸ் ஆசையைத் துாண்டி விடுவர். அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தெரியாமல், அவர்கள் உல்லாசமாக இருக்கும் போது, மொபைல் போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுத்துக் கொள்வர்

அதன்பின், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டுவார். அந்தப் பெண்ணின் கணவர், ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அதற்கு, அரசு டெண்டர்கள் கேட்டு வாங்குவர். இவ்வாறு பல்வேறு மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்த தம்பதி மற்றும் சில பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது, ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.