வேட்பு மனு தாக்கல் செய்த பிரதான வேட்பாளர்கள்... களைகட்டும் ஆர்.கே.நகரில்... காமெடி பண்ணும் சிலர் (வீடியோ)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் தற்போது இடைத் தேர்தல் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் அதிமுக.,வைச் சேர்ந்த 'மதுசூதனன்' , திமுக.,வைச் சேர்ந்த 'மருது கணேஷ்' மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தல் அதிகாரி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஆர்.கே நகரில் தேர்தல் வருவதையொட்டி எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிலர் எலும்புக் கூண்டு மாலைகள் போட்டுக்கொண்டு, சங்கிலியால் தங்களைக் கட்டிக்கொண்டு வந்த கட்சிகள் பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்ட வீடியோ...