தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பொது மக்களும் , விவசாயிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் அருகே கோட்டைக் குப்பம் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது என தெரிவித்தார். 

மக்களுக்காகத்தான் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும், அதைவிட்டுவிட்டு மக்கள் விரும்பாத, மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என கூறினார்.