Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கு முடியும் வரை கடன் வசூலிக்கக்கூடாது... வங்கிகளுக்கு எடப்பாடி உத்தரவு..!

ஊரடங்கு முடியும் வரை தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளார்.

No lending until the curfew is over ... Directive to banks
Author
Tamil Nadu, First Published Mar 26, 2020, 4:44 PM IST

ஊரடங்கு முடியும் வரை தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளார்.

அடுத்த மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைக்கு செல்லாமல் முடங்கிக்கிடக்கின்றனர். இந்நிலையில், ஊரடங்கு முடியும் வரை தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். No lending until the curfew is over ... Directive to banks

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி ஆகியோர், ‘’விவசாய நெசவாளர் கடன்,வாகன கடனை மூன்று மாதங்களுக்கு வசூலிக்க கூடாது எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios