Asianet News TamilAsianet News Tamil

ஆந்திர பள்ளிகளில் இனி கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது !! சிறப்பு சட்டம் கொண்டு வந்து அசத்திய ஜெகன் மோகன் !!

ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது என்றும்  தனியார் பள்ளிகளின்  கல்விக கட்டணம் முறப்படுத்தப்படும் என்றும் முலேமைச்சர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். இதற்கான சட்ட  மசோதா ஆந்திர சட்டசபையில்  இன்று தாக்கல் செய்யப்பட்டது.

No extrafees in andra schools told jegan mohan
Author
Vijayawada, First Published Jul 30, 2019, 6:41 PM IST

ஆந்திராவின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடி திட்டங்களை செயல்படத்தி வருகிறார். அதில் முக்கியமான ஒன்று தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவையாகும்.

No extrafees in andra schools told jegan mohan

இதற்காக புதிய சட்ட மசோதா ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும். ஆந்திராவின் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

No extrafees in andra schools told jegan mohan

இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர்  ஜெகன் மோகன் ரெட்டி, ``நம் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல அமைச்சர்கள் சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளனர். 

அவற்றில் எல்.கே.ஜி, யூகே.ஜி வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என அதிரடியாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios