Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணி கட்சிக்காரங்க எங்க ஊருக்குள் ஓட்டுக் கேட்டு வராதீங்க !! அதிரடி கிராம மக்கள் !!

நாங்கள் ஐயப்பனை கும்பிடுபவர்கள் அதனால்  கம்யூனிஸ்ட், தி.மு.க., கூட்டணி கட்சிகள் எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என விருதுநகர் அருகே கிராம மக்கள் அதிரடியாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

No entrance to our villege to dmk allaince peopla
Author
Virudhunagar, First Published Apr 2, 2019, 9:21 AM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை கோயிலுக்கு இளம் பெண்களை அனுமதித்ததுடன் மட்டுமல்லாமல் இளம் பெண்களை கோவிலுக்கு அனுப்புவதில்  ஆர்வம் காட்டியது. 

No entrance to our villege to dmk allaince peopla

இது ஐயப்ப பக்தர்களிடையே கம்யூனிஸ்ட் கட்சி மீது கோபத்தை அதிகப்படுத்தியது. ஐயப்ப பக்தர்களும், மக்களும் போராட்டத்தில் குதித்தனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் கோபம் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் மீது பாய்ந்துள்ளது. 

No entrance to our villege to dmk allaince peopla

விருதுநகரில் அய்யனார் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், தங்கள் வீட்டு சுவரில் எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்பனை கும்பிடுபவர்கள். கம்யூனிஸ்ட்., தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். 

இதே போன்று இனி அனைத்து பகுதியிலும்  போஸ்டர் ஒட்டுவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios