Asianet News TamilAsianet News Tamil

சிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது !! சாபம் விட்ட நிதின் கட்கரி !!

சித்தாந்த ரீதியில் வேறுபாடு கொண்ட காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் அமைக்கும் ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Nithin Gadkari  talk about  sivasena
Author
Mumbai, First Published Nov 22, 2019, 10:33 PM IST

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது.

ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிராகரித்ததையடுத்து கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகியது. 

Nithin Gadkari  talk about  sivasena

இந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

Nithin Gadkari  talk about  sivasena

இந்த கூட்டணி தங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உறுதிபடுத்தியதையடுத்து கூட்டணி ஆட்சி தொடர்பான ஒப்பந்தம் இன்று இறுதி வடிவம் பெற்றது. இதையடுத்து  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சராகிறார். இதற்கான அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா அமைத்துள்ள கூட்டணி தொடர்பாக பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி,  ’மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. 

Nithin Gadkari  talk about  sivasena

சித்தாந்த ரீதியில் வேறுபட்ட இந்த கட்சிகளின் ஒரே நோக்கம் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை அமைத்துவிடக்கூடாது என்பதே. அதற்காகத்தான் இந்த கூட்டணியை அமைத்துள்ளன. 

Nithin Gadkari  talk about  sivasena

ஆகவே இந்த கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தாலும் அவர்களுக்கு இடையே உள்ள சித்தாந்த வேறுபாடுகளால் அந்த ஆட்சி 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என அதிரடியாக தெரிவித்தார்.. 

Follow Us:
Download App:
  • android
  • ios