Asianet News TamilAsianet News Tamil

குரூர ஆடிட்டர் குருமூர்த்தி நடத்தும் துர்நாற்றப் பத்திரிகை துக்ளக்... தெளிய தெளிய வெச்சு அடித்த நமது அம்மா!!

ஆண்மையற்ற தலைவர்கள் என ட்வீட் போட்டதற்கு அதிமுக தரப்பில் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தது. அதிலும் அமைச்சர் ஜெயக்குமார் தில்லாக ”ஆடிட்டர் குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேசக்கற்றுக்கொள்ள வேண்டும், குருமூர்த்திக்குதான் ஆண்மை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என காட்டமாக பதிலளித்ததைப்போலவே இந்தமுறையும் அதிமுக பிச்சையெடுப்பது போல சித்தரித்து கார்ட்டூன் போட்டதற்கு தெளிய தெளிய வெச்சுசெய்துள்ளது  நமது அம்மா.

namadhu amma reply for Auditor gurumurthy cartoon
Author
Chennai, First Published Jun 7, 2019, 1:36 PM IST

மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி துக்ளக் இதழில் 9 ஆம் பக்கத்தில் மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் கேலிச்சித்திரம் அதிமுகவினரை மட்டுமல்ல தமிழகத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அறைக்குள் அமர்ந்து விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க வெளியே ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் காத்து நிற்பது போல வரையப்பட்டு, ‘உஸ்ஸ்... யாரும் அழப்படாது. 

நம்மளையெல்லாம் உள்ள கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துச்சுன்னா குடுப்பாங்க. அப்ப சாப்பிடலாம்’ என்ற வாசகங்களை அதிமுகவினரே சொல்வது போல குறிப்பிட்டிருந்தது துக்ளக். அதாவது மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் நேரடியாக சொல்லியிருந்தது.

namadhu amma reply for Auditor gurumurthy cartoon

இந்த நிலையில் இதற்கு காட்டமாக பதிலளித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. இன்றைய நமது அம்மாவில் தரங்கெட்ட பத்திரிகையும் தரம்தாழ்ந்த விமர்சனமும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பாஜக அமைச்சர்கள் உள்ளே அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், கழகம் வெளியே நின்று சாப்பிட ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது துக்ளக். பொதுவாழ்க்கை என்பது சேவையற்றது. ஆனால் இதற்கு பதிலாக சாப்பிடுவதே அரசியல் என்பதுபோல துக்ளக் வெளியிட்டிருக்கும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களைத்தான் மலிவாகச் சித்தரித்து அவர்களின் நேர்மையை களங்கப்படுத்தி இருக்கிறது.

அதிகாரத்திற்கு ஏங்குவதாக அதிமுவை அப்பத்திரிகை விமர்சித்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகாலத்தில் 30 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் உள்ள கட்சி அதிமுக. மத்திய அரசின் அதிகாரங்களுக்கு அதிமுக ஒருபோதும் மல்லுக்கு நின்றதில்லை, மண்டியிட்டும் கிடந்ததில்லை என்பதே வரலாறு.

namadhu amma reply for Auditor gurumurthy cartoon

ஆனால் இதையெல்லாம் அறியாதவர்கள் போல கழகத்தின் அமைச்சர்களை இம்போடேட் என்றும் பந்திக்காக அலைபவர்கள் என்றும் ஒரு குரூரத்தோடு ஆடிட்டர் குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்ற பின்னர் துக்ளக் பத்திரிகை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களை தரம்தாழ்ந்து விமர்சித்துவருகிறது.

சோ நடத்திய பாரம்பரிய பத்திரிகை இப்போது நாளேல்லாம் பெட்டிகடைகளில் வாசிப்பதற்கு ஆள் இல்லாது தூக்கில் தொங்குகிற துர்நாற்றப் பத்திரிகையாக மாறிவிட்டது. அதனால் இதுபோன்ற நாலாந்தர விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் கடந்து போவதே அவர்களுக்கு நாம் தரும் பதிலாக இருக்க வேண்டும் என்றும் காட்டமாக பதிலளித்துள்ளது.

ஏற்கனவே, ஆண்மையற்ற தலைவர்கள் என ட்வீட் போட்டதற்கு அதிமுக தரப்பில் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தது. அதிலும் அமைச்சர் ஜெயக்குமார் தில்லாக ”ஆடிட்டர் குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேசக்கற்றுக்கொள்ள வேண்டும், குருமூர்த்திக்குதான் ஆண்மை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் என காட்டமாக பதிலளித்ததைப்போலவே இந்தமுறையும் அதிமுக பிச்சையெடுப்பது போல சித்தரித்து கார்ட்டூன் போட்டதற்கு தெளிய தெளிய வெச்சுசெய்துள்ளது  நமது அம்மா.

Follow Us:
Download App:
  • android
  • ios