Asianet News TamilAsianet News Tamil

மோடி குறித்த சர்ச்சைப் பேச்சு... கைது செய்யப்படுகிறார் நெல்லைகண்ணன்..?

மோடி குறித்த சர்ச்சை பேச்சால் காங்கிரஸ் நிர்வாகி நெல்லை கண்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு இடங்களில் கைது செய்யக்கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டு  வருகிறது. 

Nallai Kannan arrested over controversy speech over Modi
Author
Tamil Nadu, First Published Dec 30, 2019, 5:47 PM IST

இஸ்லாமியர்கள் மோடி  கதையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன். இஸ்லாமியர்கள் மோடி கதையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்? சீக்கிரம் முடிங்கப்பா என்று நெல்லை கண்ணன் முஸ்லிம்கள் அமைத்த மேடையில் பேச அதைச்  சிரித்து ரசிக்கிறார்கள்? ஒரு இஸ்லாமியர் தவறு என்று கண்டிக்கவில்லை!

Nallai Kannan arrested over controversy speech over Modi

ஸ்டாலின் தூண்டுதலா? விசாரணை தேவை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னொரு இந்திய பிரதமரை படுகொலை செய்ய திமுக ஆதரவாளர்கள் திட்டமா? அரசு விசாரனை தேவை’’என விமர்சகர் மாரிதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

அமித்ஷாவை கொல்ல இஸ்லாமியர்களிடம் வேண்டுகோள் விடுத்த நெல்லை கண்ணன் என்ற பொறுக்கியை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். ரவுடிகள் லிஸ்டில் இருப்பவரகளை காவல் துறை எப்படி நடத்துமோ அப்படி இவனையும் நடத்த வேண்டும்’’என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 Nallai Kannan arrested over controversy speech over Modi

தமிழகத்தில் இன்னொரு படுகொலையா? அன்று இந்திரா, ராஜீவ் போன்றோர் அதன் கூட்டணி கட்சிகளாலே படுகொலை செய்யப்பட்டனர். இன்று அதே காங்கிரஸ் நெல்லை கண்ணன் மற்றும் திமுக, முஸ்லிம் கூட்டணி வன்முறையை கையிலெடுக்கிறது. பிரதமர் உள்துறை அமைச்சருக்கே கொலைமிரட்டல் என்றால் சாமான்யன் வாழ முடியுமா இங்கு..? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திருமலை பாலாஜி என்பவர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிந்துள்ளார். Nallai Kannan arrested over controversy speech over Modi

அதே போல் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தமிழக டிஜிபிக்கு அளித்துள்ள மனுவில், பிரதமர் மோடியை கொல்லும் படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன் முஸ்லீம்களை தூண்டி விடும் வகையில் பேசியுள்ளார். அவரது இந்தப்பேச்சை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios