Asianet News TamilAsianet News Tamil

நாகை- திருப்பூர் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Nagai-Tirupur DMK alliance official nomination
Author
Tamil Nadu, First Published Mar 15, 2019, 6:22 PM IST

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி திருப்பூர், நாகபட்டினம் தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அக்கட்சியின் நல்லகண்ணு திருவாரூரில் அறிவித்தார். அதன்படி திருப்பூரில் சுப்பராயனும், நாகபட்டினத்தின் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வராசும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். Nagai-Tirupur DMK alliance official nomination

ஏற்கெனவே மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும், கோவையில் பி.ஆர்.நடராஜனும் திமுக கூட்டணி சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios