சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் உருகியுள்ளார்.

இந்தியன்-2’படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் படக்குழுவை நிலைகுலையச் செய்துள்ளது. ``எத்தனையோ விபத்துகளைக் கடந்திருந்தாலும் இந்த விபத்து கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்” என வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் கமல்.

2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே `இந்தியன்-2’ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. விரைவில் படப்பிடிப்பு முடிய வேண்டும் என்பதால் இரவு நேரங்களில் பகல் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் படப்பிடிப்பில் அந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் இன்று அவரது கட்சி மூன்றாம் ஆண்ட்ல் அடியெடுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி, தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்’’ எனத் தெரிவித்துள்ளார்.