அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயிரம் ஆண்டுகள் போராடிய  சமுதாயம் உண்டென்றால் அது இந்த பாரத சமுதாயம்தான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’இந்த நாடு 800 ஆண்டுகள்  முஸ்லிம் படையெடுப்பாளர்கள் கீழும், 200 ஆண்டுகள் ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கீழும் அடிமைப்பட்டு இருந்தது என்று கூறுவார்கள். ஆனால், பாரத நாட்டு மக்கள் ஒருபோதும் அடிமைத்தனத்தை ஏற்றதில்லை. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஆயிரம் ஆண்டுகள் போராடிய  சமுதாயம் உண்டென்றால் அது இந்த பாரத சமுதாயம்தான்.

ஆங்காங்கு முஸ்லிம் படையெடுப்பாளர்களை வீழ்த்தி சுதந்திர இந்து சாம்ராஜ்யங்களை நிறுவியவர்களில் புகழ்மிக்கவர் சத்ரபதி சிவாஜி. இன்று அவருடைய பிறந்த தினத்தில் அவருக்கு வீரவணக்கங்களை செலுத்தி கொள்வதோடு சிவாஜியின் வீரமும் சாமர்த்தியமும் நாம் ஒவ்வொருவரும் பெற்றிடவேண்டிய தருணமிது என்பதை வலியுறுத்திக் கொள்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.