மாற்று மதத்திற்கு மக்கள் வரிப்பணத்தில் சலுகை. ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழக பட்ஜெட்டில் கிறிஸ்துவ தேவாலயங்களி பழுது பார்ர்ப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை ரூ.1 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனால் கோபமடைந்த ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’இந்து கோவில்கள் வசம் உள்ள 468000 ஏக்கர் நிலம், 22000 கட்டிடங்கள், 28 கோடி ச.அடி மனைக்கட்டு அனைத்தும் அரசிடம். இந்து கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தவருக்கே பட்டா வழங்க அரசாணை. மாற்று மதத்திற்கு மக்கள் வரிப்பணத்தில் சலுகை. ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு.

 

500 ஆண்டுகள் பழைமையான திருக்கோவில்கள் பல சிதிலமடைந்த நிலையில் உள்ளது அதை புனரமைக்க ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் கோவில்கள் மூலம் வரும் வருமானம் மட்டும் வேண்டும். இளிச்சவாய இந்துக்கள் இருக்கும் வரை உங்களுடைய அரசியல் பிழைப்பு ஓடும்’’எனத் தெரிவித்துள்ளார்.