Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரஸ் சீரியஸ் தெரியாமல் இருக்கிறார் மோடி..!! ராகுல்காந்தி குற்றச்சாட்டு.!!

கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். 

Modi not aware of coronavirus virus .. !! Rahul Gandhi's accusation. !!
Author
India, First Published Feb 13, 2020, 7:14 AM IST

 By:T.Balamurukan

 கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவில் தற்போது வரையில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எந்த அளவிற்கு கொடுமையானது என்று மோடிக்கு தெரியவில்லை.இருந்தாலும் இப்பிரச்சனையை மத்திய அரசு ஈசியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Modi not aware of coronavirus virus .. !! Rahul Gandhi's accusation. !!

 ராகுல் காந்தி தனது ட்விட்டர் போஸ்டில், 'கொரோனா வைரஸ் என்பது இந்திய மக்களுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. என்னைப் பொறுத்தளவில் மத்திய அரசு இந்த பிரச்னையை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.சீனாவை மையமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,113-யை தாண்டியுள்ளது.  வைரஸ் முதலில் பரவிய ஹூபே மாகாணத்தில் பலி எண்ணிக்கை 97-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மொத்தம் 44,653 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Modi not aware of coronavirus virus .. !! Rahul Gandhi's accusation. !!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சத்தில் அதிரவிட்டுக்கொண்டிருக்கிறது.பல நாடுகள் சீனாவில் இருந்து வர தடை போட்டிருக்கிறார்கள்.இந்த கொடிய வில்லனுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காதது ஒரு மைனஸ் தான்.

Follow Us:
Download App:
  • android
  • ios