மின் விளக்கை அணைத்து, டார்ச் அடியுங்கள் என பிரதமர் மோடி அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை குறிக்கும் வகையில், வரும்  5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்.

9 நிமிடங்களுக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும். அல்லது செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். விளக்கேற்றும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், ஒன்று கூடி விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘’மின் விளக்கை அணைத்து, டார்ச் அடியுங்கள் என அறிவித்து மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார். பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என பிரதமர் மோடிதான் விளக்கமளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.