Asianet News TamilAsianet News Tamil

ஒரே குரலில் சட்டமன்றத்தில் ஓங்கியடித்த எம்எல்ஏக்கள்..!! ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கேட்டு பிடிவாதம்...!!

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரெலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடியுரிமை வழங்கி உள்ளன.

 
 

mla ansari and mla karunas and cong mla prince demand to Indian city-son-ship for Lankan Tamils
Author
Chennai, First Published Feb 18, 2020, 1:14 PM IST

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையே வேண்டும் என  சட்டசபை வளாகத்தில் தமிமுன் அன்சாரி, கருணாஸ் , பிரின்ஸ் உள்ளிட்டோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குதல் தொடர்பாக தங்கம். தென்னரசு அவர்கள் உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்களின் பதில் திருப்தியளிக்கவில்லை என கூறி எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

mla ansari and mla karunas and cong mla prince demand to Indian city-son-ship for Lankan Tamils

இதை ஆதரித்து மஜக பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுபினருமான மு.தமிமுன் அன்சாரி , முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ்,  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  பிரின்ஸ்  ஆகியோர் சட்டசபை வளாகத்தில் பத்திரிக்கையார்களை சந்தித்தனர். அப்போது பேசிய  தமிமுன் அன்சாரி ,  இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரெலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடியுரிமை வழங்கி உள்ளன. 

mla ansari and mla karunas and cong mla prince demand to Indian city-son-ship for Lankan Tamils

அவர்கள்தான் அங்கு தமிழை வளர்க்கிறார்கள். தமிழை பரப்புகிறார்கள்,  இந்தியாவில் அகதிகளாக வாடி வதங்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை தான் வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலை பாடாகும். இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என பாராளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் அறிவித்து விட்டார். எனவே இப்பிரச்சனையை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அனுப்ப வேண்டும் என அவர் பேசினார், அதைத்து தெடர்ந்து வந்த கருணாஸ் மற்றும் காங்கிராஸ் கட்சி உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இதே கருத்தை வலியுறுத்தினர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios