Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான்... அதிரடியாக ஒப்புக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.

MK Stalin's Misa is a prisoner
Author
Tamil Nadu, First Published Nov 13, 2019, 1:27 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார். MK Stalin's Misa is a prisoner

மு.க.ஸ்டாலின் மிசா கைதியாக சென்றாரா..? அல்லது மிசா காலத்தில் மற்றொரு வழக்கில் கைதியாக சென்றாரா? என்கிற சர்ச்சை எழுந்து வருகிறது. அதற்கு திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சர்ச்சை முடிவுவுக்கு வரவில்லை. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.  MK Stalin's Misa is a prisoner

தான் நடத்தும் துக்ளக் பத்திரிக்கையில் கேள்வி -பதில் பகுதியில், கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன்  என்பவர், இப்போது ஸ்டாலின் மிசா கைதியா..? முரசொலி கட்ட இடம் பஞ்சமி நிலமா? அண்ணா அறிவாலய இடம் அனாதை இல்லம இடமா? என்ற விவகாரங்கள் விவாதிக்க்கப்படுவது பற்றி? என கேள்வி எழுப்பி இருந்தார்.MK Stalin's Misa is a prisoner

அதற்கு பதிலளித்துள்ள குருமூர்த்தி,  ’’ஸ்டாலின் மிஸா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. அது எனக்கே தெரியும். அவசர காலம் முடிந்து நட்நத 1977 தேர்தலில் அவருடன் இணைந்து முரசொலி மாறனுக்கு நான் பிரசாரம் கூடச் செய்திருக்கிறேன். எனவே அவர் மிசா ஸ்டாலின் தான். ஆனால் முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமா? அண்ணா அறிவிவாலயம் அனாதை இல்லமா என்பது எனக்குத் தெரியாது’’எனத் தெரிவித்துள்ளார். துக்ளக்கில் வெளியான அந்தப்பக்கத்தை திமுக ஆதரவாளர்கள் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios