Asianet News TamilAsianet News Tamil

மனசாட்சியோட, மனிதநேயத்தோட நடந்துக்கோங்க... கோத்தபயவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை..!

இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என திமுக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin's advice to Gotabhaya
Author
Tamil Nadu, First Published Nov 18, 2019, 2:36 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள். MK Stalin's advice to Gotabhaya

கோதபய ராஜபக்சவின் வெற்றியை இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாக கடந்து போகவும் முடியாது.  அவருடைய பழைய வரலாறு, ஈழத் தமிழ் மக்களுக்கு  முற்றிலும் எதிரானது என்பதையும் அதனால் ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும் இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும்  பிரச்னைகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையமும் உலக நாடுகளும் நன்கு அறியும்.

 MK Stalin's advice to Gotabhaya

முன்னர் கொண்டிருந்த பகை- ஆதிக்க மேலாண்மை உணர்ச்சியில் இருந்து அவர் விடுபட்டு; தமிழ் மக்கள், அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மனசாட்ட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும்; அது ஒன்றே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பொருள் பொதிந்த புதிய பாதையாக அமைந்திடும் என்றும் உலகச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. MK Stalin's advice to Gotabhaya

கோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மோடி அவர்களும், மத்திய மாஜக அரசும், ஈழத்தமிழர்களின் நலனையும், உரிமைகளையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பது உலகத்தமிழர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு’’எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios