அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட எனது வாழ்த்துகள் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் திமுகவைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கேக் வெட்டியும், அன்னதானம் அளித்தும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். கரூரில் 67 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடினர். அதேபோல், பல்வேறு மாவட்டங்களியும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில், தமிழக அரசியலில் கமல்ஹாசனும், மு.க.ஸ்டாலினும் எதிரும், புதிருமாக இருந்தாலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அன்பு சகோதரர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.